செருப்பால அடிச்சிருக்கணும்..பெண்ணைப் பெற்ற தகப்பன் - அண்ணா பல்கலை விவகாரம் குறித்து பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு!
அண்ணா பல்கலை விவகாரம் குறித்து பிரபல தமிழ் நடிகர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு,
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனைக் கடந்த 25ஆம் தேதி கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் எம்எஸ் பாஸ்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,'அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவிக்கு கடந்த திங்களன்று பாலியல் வன்கொடுமை.. பாதுகாப்பு வேண்டி மாணவர்கள் போராட்டம்.. உடனே பொதுவாக சொல்லப்படும் கருத்து 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது''
சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது யார் குற்றம்? கல்வி கற்கச் செல்லுமிடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா? காதலனுடன் மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிற்றா? வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன்.
பரபரப்பு பேச்சு
நெட்டில் விடுவேன் என்று அந்தக் காமுகன் மிரட்டினால், விட்டால் விடடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும். அவனை மட்டுமல்ல, தப்பி ஓடிய அந்தக் காதலனையும் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு கான்ஸ்டபிள் போட்டா பாதுகாப்பு தர முடியும்? பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன்.
மொத்தத்தில் அனைவரும் முக்கியமாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்க வேண்டியது அவசியம். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் பயனில்லை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப் போவதில்லை.
இதில் ஒருவேளை அரசைக் குறை கூறினால் அது நியாயமே இல்லை. வேதனையுடன் எம்.எஸ்.பாஸ்கர்" என்று தன்னுடைய அறிக்கையில் எம்எஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.