FIR லீக் ஆனது எப்படி? யார் அந்த சார்? காவல் ஆணையர் விளக்கம்

Chennai Sexual harassment Tamil Nadu Police Anna University
By Karthikraja Dec 26, 2024 03:30 PM GMT
Report

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

anna university girl issue

இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

என்னை நானே சாட்டையால் அடித்து கொள்வேன்; இனி செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்

என்னை நானே சாட்டையால் அடித்து கொள்வேன்; இனி செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்

காவல் ஆணையர்

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருந்த FIR நகல் சமூகவலைத்தளத்தில் வெளியானதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த தகவல் முடக்கப்பட்டது. 

chennai commissioner arun about anna university girl

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். இதில் பேசிய அவர், "பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலத்தை எப்படிக் கொடுக்கிறார்களோ அப்படிப் பதிவு செய்யப்படுவது தான் FIR ஆகும். அதன்படி தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

FIR லீக்

போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எஃப்ஐஆர் பதிவு செய்யும்போது, சிசிடிஎன்எஸ் (கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம்ஸ்) எனும் ஆன்லைன் போர்ட்டல் ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகிவிடும்.

IPC சட்டமானது, BNS சட்டமாக மாறும் பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்ஐஆரை முடக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஒரு சிலர் எஃப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்து அவர்கள் மூலம் எஃப்ஐஆர் வெளிவந்திருக்கலாம்.

எந்த எஃப்ஐஆரை பதிவு செய்தாலும், புகார்தாரருக்கு அதன் நகலை கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பிரதி கொடுத்தோம். இந்த இரண்டு வழிகளில்தான் எஃப்ஐஆர் வெளியே வந்திருக்க வேண்டும்.

20 வழக்குகள்

இதுபோன்ற வழக்குகளில் எஃப்ஐஆர் வெளியே வந்திருக்கக்கூடாது. அவ்வாறு வெளியிடுவது சட்டப்படி குற்றம். அவ்வாறு வெளியான எஃப்.ஐ.ஆரை வைத்து விவாதம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். நாம் கொடுக்கும் தகவல்களை வைத்தே பாதிக்கப்பட்ட நபரை கண்டுபிடிக்க முடியும் என்ற அளவுக்கு தகவல் தெரிவித்தாலே அதுவும் தவறு. 

எஃப்.ஐ.ஆரை வெளியிட்டது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வெளியிட்டது யார் என கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும். 

சென்னை காவல் ஆணையர் அருண் அண்ணா பல்கலைக்கழகம்

கடந்த 2013 முதல் ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 6 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் மீது பெண்களை வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்குகள் இல்லை.

சார் யாரும் இல்லை

குற்றம் நடைபெறும்போது, ஞானசேகரன் போன் ஃப்ளைட் மோடில் இருந்தது. எனவே அவர், 'சார்’ என பேசியதாக பரவும் தகவல் போலியானது. இந்த வழக்கில் சார் என்று யாரும் இல்லை.

தற்போது மாணவி கொடுத்துள்ள புகாரை தவிர, இதுவரை இவரால் பாதிக்கப்பட்டதாக எந்தப் பெண்ணும் புகார் கொடுக்கவில்லை. ஞானசேகரனின் போன் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் புகார்கள் பெறப்படும்.

70 சிசிடிவி கேமரா

அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது. அதிலிருந்து ஆதாரங்கள் கிடைத்தன. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே ஆய்வுக் கூட்டங்களில் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை.

பல்கலைக்கழக வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன. 140 பேர், 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். மேலும் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். யார் பாதிக்கப்பட்டாலும் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும்." என பேசினார்.