இவங்கள நியாபகம் இருக்கா? பப்லுவின் முன்னாள் காதலிக்குத் நடத்த திருமணம் - மாப்பிள்ளை இவர்தான்!
நடிகர் பப்லு பிரித்விராஜின் முன்னாள் காதலிக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
நடிகர் பப்லு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் பப்லு ப்ரித்விராஜ். அதனைத் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் தனகென ஒரு இடத்தை பிடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள என பிற மொழியிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சின்னதிரையில் ஒளிபரப்பான ராதிகா நடித்த வாணி ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானர்.சமீபத்தில் 60 வயதான பப்லுவிற்கு 23 வயது ஷீத்தல் என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
முன்னாள் காதலி
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரேக்அப் செய்து பிரிந்துவிட்டனர்.இந்நிலையில் ஷீத்தலுக்கு சுமேஷ் சோமசேகரன் என்பவர் உடன் திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்திருக்கிறது. இது குறித்து தனது திருமண போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அதில் நல்லதோ, கெட்டதோ, பணக்காரரோ , ஏழையோ மரணம் மட்டுமே நம்மைப் பிரிக்க வேண்டும் என்று ஒரு நீண்ட பதிவையும் எழுதி இருக்கிறார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.