சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் போட்டியாளர்..ஜீ தமிழில் என்ட்ரி - என்ன காரணம்?
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் விஜய் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 8
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.இதில் பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகனாக நடித்த அருண் பிரசாத், நடிகை தர்ஷா குப்தா, பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்த ஃபரீனா ஆசாத், செல்லம்மா சீரியல் நடிகை அக்ஷிதா மற்றும் நடிகர் அர்னவ்,
அதுபோல தொகுப்பாளராகவும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகனாகவும் நடித்த நடிகர் தீபக், 'குக்கு வித் கோமாளி' சுனிதா, உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஜீ தமிழில் என்ட்ரி
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் அர்னவ் எவிக்ட் செய்யப்பட்டார்.இவர் வெளியே வந்தபிறகு பிக்பாஸ் வீட்டினரை வீடியோ மூலம் சந்தித்து போட்டியாளர்களிடம் வன்மத்தைக் கக்கும் விதமாகப் பேசியது ரசிகர்களுக்கு மட்டுமல்ல விஜய் சேதுபதிக்கே பிடிக்கவில்லை.
மேலும் விஜய் சேதுபதி வார்னிங் செய்து அனுப்பினார். இந்த நிலையில், இதனையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியிலிருந்து விலகி ஜீ தமிழுக்குச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் முதற்கட்டமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் கெஸ்ட் என்ட்ரி கொடுத்துள்ளார்.