ஒரே விமானத்தில் விஜய் - த்ரிஷா .. இணையத்தில் வரும் போட்டோஸ் உண்மையா? இதை பாருங்க!
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு ஒரே விமானத்தில் விஜய், த்ரிஷா பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண விழா
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாகக் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான இது என்ன மாயம் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.தொடர்ந்து பைரவா ,ரஜினி முருகன்,மகாநதி ,சர்கார் , அண்ணாத்த உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துப் பிரபலமான கீர்த்தி சுரேஷ் “தெறி” படத்தின் இந்தி ரீமேக்கான “பேபி ஜான்” படத்தின் மூலமாக இந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டில் என்பவரைக் கீர்த்தி சுரேஷ், நேற்று திருமணம் செய்து கொண்டார்.இவருடைய திருமணம் கோவாவில் நேற்று காலை 9:40 மணியளவில் நடைபெற்றது.
விஜய், த்ரிஷா
அந்த திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணத்திற்குக் கலந்து கொள்வதற்கு ஒரே விமானத்தில் விஜய், த்ரிஷா பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
Lovely couples #Thalapathi #Vijay and #Trisha ❤️
— R E P O R T E R 𓃵 N A H S R A H D (@imNAyrus) December 12, 2024
Went to Goa for #KeerthySureshMarriage ❤️pic.twitter.com/kBnR6libn1
இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நேற்றிலிருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.