என்னுடன் பாலியல் உறவு வைத்தால் பேய் போய்விடும்.. பாதிரியாரை நம்பி மொத்தமாக இழந்த ஆசிரியர்!
பாதிரியார் ஒருவர் ஆசிரியரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் 33 வயது பெண், இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்பொழுது இவர் சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் மன உளைச்சல் காரணமாக அருகில் உள்ள சர்ச்களுக்கு சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். அப்பொழுது பாதிரியார் ஒருவர் தூத்துக்குடியில் உள்ள ஜோஸ்வா என்ற பாதிரியாரை அறிமுகம் செய்து வைத்தார். இவரிடம் அந்த ஆசிரியர் தனது கஷ்டங்களை கூறியுள்ளார், அப்பொழுது அவர் நேரில் சந்திக்கவேண்டும் என்று அழைத்துள்ளார்.
ஏமாற்றிய பாதிரியார்
இந்நிலையில், நேரில் சென்ற ஆசிரியரிடம் பேசிய பாதிரியார் "உங்க உடம்பில் பயங்கர பேய் ஒன்று இருக்கிறது.. அந்த பேய் உங்கள் உடம்பைவிட்டு போகாது.. அதை விரட்டவேண்டுமானால், என்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவேண்டும்" என்று கூறியுள்ளார். அந்த ஆசிரியரும் அவரை நம்பி பலமுறை உறவில் இருந்துள்ளனர்.
மேலும், அவர் திருப்பி தருவதாக கூறி பல லட்சம் கேட்டு வாங்கியுள்ளார். ஆனால் ஆசிரியர் பணத்தை கேட்டபொழுது தரவில்லை என்று கூறியுள்ளார், இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சென்று ஆசிரியர் புகாரளித்தார். மேலும், வழக்கு பதிவு செய்த போலீஸார் பாதிரியாரை தேடி வருகின்றனர்.