நான் தான் jesus 2.0: உயிர்தெழுவதாக சவப்பெட்டியில் படுத்த பாதிரியார் - தோண்டி பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் தான் இயேசுவின் தூதுவர் என்றும் தன்னை புதைத்தால் 3 நாட்களுக்கு பிறகு உயிர்த்தெழுவேன் என்றும் கூறி மண்ணில் புதைந்த பாதிரியார் ஜேம்ஸ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயேசு கிறிஸ்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த பிறகு கல்லறையில் அடைக்கப்பட்ட அவர், இறப்பை வென்று 3ஆவது நாள் உயிர்த்தெழுந்தார்.
அந்த 3ஆவது நாளை கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறாக கொண்டாடி வருகிறார்கள். அதாவது புனித வெள்ளியிலிருந்து மூன்றாவது நாள் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.
இதை போல் ஆப்பிரிக்காவில் பாதிரியார் ஒருவர் தான் இயேசுவின் தூதுவர் என கூறிக் கொண்டு அவர் செய்த செயல்களால் உயிரிழ்ந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவை சேர்ந்த பாதிரியாரான ஜேம்ஸ் சக்காரா, இயேசுவின் தூதர் என்று தன்னை அறிவித்துக் கொண்டார். பின்னர் இயேசுவை போல் தானும் 3 நாட்களில் உயிர்த்தெழுவேன் என கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் இருக்கும் தேவாலயம் பகுதியில் ஒரு இடத்தில் குழித்தோண்டினார். குழியில் புதைந்த பாதிரியார் அதில் தன்னைத் தானே புதைத்துக் கொண்டார். அப்போது அவர் பைபிளில் உள்ள இயேசுவின் பொன்மொழிகளை படித்தார்.
சவக்குழியில் படுத்த பாதிரியாரின் கைகளை மற்ற பாதிரியார் கட்டியுள்ளார். பின்னர் மணலை போட்டு அந்த சவக்குழியை மூடியுள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு இவர்கள் அந்த சவக்குழியை தோண்டி பார்த்தனர்.
அப்போதுதான் பாதிரியார் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைகளை கட்டி உயிரிழப்புக்கு துணை போன மற்றொரு பாதிரியாரையும் அதிரடியாக கைது செய்தனர்.