சாக்லேட் பிரியர்களே.. ஓர் அதிர்ச்சி செய்தி - இந்தியாவில் விலை உயரும் அபாயம்!
சாக்லேட் விலையை தயாரிப்பு நிறுவனங்கள் உயர்ந்தவுள்ளன.
சாக்லேட் விலை
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பட்டியலில் சாக்லேட் முதலாக உள்ளது. அனைவரையும் கட்டிப்போட்டுள்ள ஓர் உணவு பண்டம் என்றால் அது சாக்லேட் தான்..
டார்க் சாக்லேட்டின் நன்மை காரணமாக உடல் ஆரோக்கியத்துக்கு அது பரிந்துரை செய்யப்படுகிறது. ஐஸ்க்ரீம் உள்ளிட்ட இதர ரசனையான ரகங்களில் கூட சாக்லேட் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், உலக சந்தையில் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் கோகோ பீன் விலை ஒரு கிலோ ரூ.650 என்றளவுக்கு உயர்ந்துள்ளது. உள்ளூர் விலைகள் தற்போது 200 சதவீதம் உயர்ந்துள்ளன. கோகோ ஃபியூச்சர்ஸ் விலையும் ஒரு டன்னுக்கு சுமார் 7,000 அமெரிக்க டாலர் என்றளவில் உள்ளது.
மோசமான வானிலை
மோசமான வானிலை மற்றும் பூச்சித் தாக்குதல் காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் பிரீமியம் டார்க் சாக்லேட்டுகள் முதல் கட்டமாக விலையை உயரும். உள்நாட்டின் கோகோ தேவை என்பது தற்போது 1.5 லட்சம் டன்களைத் தொட்டுள்ளது.
எனவே சாக்லேட் ரகங்கள் மட்டுமன்றி கோகோ பவுடர் கொண்டு தயாரிக்கப்படும் இதர பொருட்களும் விலை உயர்வை சந்திக்கும். இதே நிலைமை தொடர்ந்தால் ஒரு டன்னுக்கு 10,000 டாலர் என்றளவுக்கு விலை எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து உள்ளூர் சந்தைகளில் இரண்டாம் ரக சாக்லேட்டுகளை முன்னிறுத்துவதன் மூலம் இந்த நிலைமையை சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.