சாக்லேட் வேண்டாம்; சிக்ரெட்தான் வேண்டுமென அடம்பிடிக்கும் குழந்தைகள் - அதிர்ச்சி காரணம்!
புகையிலைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புகையிலை
புகையிலை நுகர்வு போட்டியில் இந்தோனேசியா முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள மக்களுக்கு புகைபிடிப்பது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
ஒரு படி மேலே சென்று மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிகரெட் பிடிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. சில சமயங்களில் பெற்றோர்களின் முன்னிலையில் குழந்தைகள் புகைபிடிக்கின்றன.
ஆபத்தை நோக்கி நாடு
இதுகுறித்த ஆல்பத்தை மிச்செல் சியு என்ற புகைப்படக் கலைஞர் ‘மார்ல்போரோ பாய்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். முன்னதாக 2010ல் 2 வயது குழந்தை ஒன்று சிகரெட்டு பழக்கத்திற்கு அடிமையாகி, ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகள் வரை புகைப்பார் என்ற செய்தி பெரும் பேசுபொருளானது.
தொடர்ந்து, அந்த குழந்தையை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். தற்போது மீண்டும் சிறுகுழந்தைகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவது நாட்டின் எதிர்காலத்தை கேள்விக் குறிக்குள்ளாக்கியுள்ளது.