பறவை எச்சம் நிறைந்த சூப்; 500 கிராம் ரூ.1.6 லட்சம் - சுவைக்க ஆர்வம் காட்டும் சீன மக்கள்!
பறவையின் எச்சம் நிறைந்த சூப்பை சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பறவை எச்சம் சூப்
சீன மக்கள் பறவைகளின் எச்சம் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூப் ஸ்விஃப்ட்லெட் என்ற சீன பறவையின் கூடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
இது சரும பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என்றும் சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிக வருவாய்
இந்த பறவைகளின் எச்சம் நிறைந்த சூப் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்டு வருகிறது. மேலும், வெறும் 500 கிராம் உலர்ந்த பறவை கூட்டின் விலை ரூ.1.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவாதாக கூறப்படுகிறது.
இதில் அதிக வருவாய் கிடைப்பதால், மக்கள் தங்களது காலி வீடுகளை ஸ்விஃப்ட்லெட் வீடுகளாக மாற்றி பண்ணையாக பயன்படுத்துகின்றனர். இந்த சூப்பை பருக சீன மக்கள் ஆர்வம் காட்டி வருவது நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.