ஏலியன்கள் குறித்த தகவல்களை மறைத்ததா சீனா? : வெளியான அதிர்ச்சி தகவல்
சீனாவில் உள்ள மிகப் பெரிய தொலைநோக்கி ஸ்கை ஐ வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவலை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனித இனத்தின் அறிவியல் வளர்ச்சி தொடங்கிய காலத்திலிருந்தே பூமிக்கு அப்பால் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்கிறது, உலகின் பல நாடுகளும் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.
ஏலியன்கள் தகவலை நீக்கியதா ஸ்கை ஐ
இந்த நிலையில் சீனாவில் உள்ள பெரிய தொலைநோக்கியாம ஸ்கை பவேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல்களை சேகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சீன அரசு ஆதரவு பெற்ற அறிவியல்தொழில்நுட்ப இதழ் இது குறித்த தகவல்களை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி டெய்லியின் இணையதளத்தில் இருந்து இந்த அறிக்கை நீக்கப்பட்டுள்ளது . இந்த தகவலை ஏன் நீக்கினர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உலகிலேயே பெரிய தொலைநோக்கி
சீனாவின் அதிநவீன, ஸ்கை ஐ எனப்படும் தொலைநோக்கி கருவியில் பதிவான ரேடியோ அலைகள் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொலை நோக்கியில் மிகச்சிறிய ரேடியோ அலைகளைகூட துல்லியமாக பதிவுச்செய்யும் உணர்திறன் கொண்டது இந்த தொலைநோக்கி 1640 அடி உயரம் கொண்டது .
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் நாசா வேற்று கிரகவாசிகள் குறித்த விவரங்களை சேகரித்து அது குறித்த ஆராய்ச்சிகளை தொடங்க உள்ளதாக தெரிவித்த நிலையில் தற்போது சீனா வேற்று கிரகவாசிகள் குறித்த தகவல்களை நீக்கியுள்ளது சர்வதேச அளவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெண்களை கர்ப்பமாக்கிய ஏலியன்கள் : அமெரிக்க ரகசிய ஆவணங்களில் பரபரப்பு தகவல்கள்