இனி சீனாவுக்கு விசா இல்லாமல் போகலாம்; ஆனால்.. எந்த நாடெல்லாம் தெரியுமா?

China Tourism Visa-Free Entry
By Sumathi Nov 23, 2024 07:02 AM GMT
Report

பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.

சீனா

சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், 9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

china

ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக

பிரிந்து சென்ற மனைவி - பார்ப்பதற்காக 100 நாட்களுக்கு மேல் சைக்கிளில் பயணம் செய்த நபர்!

பிரிந்து சென்ற மனைவி - பார்ப்பதற்காக 100 நாட்களுக்கு மேல் சைக்கிளில் பயணம் செய்த நபர்!

விசா இன்றி பயணம்

அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். இதன்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாட்கள் வரை அங்கு தங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் வரும் 30-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இனி சீனாவுக்கு விசா இல்லாமல் போகலாம்; ஆனால்.. எந்த நாடெல்லாம் தெரியுமா? | China Is Expanding Visa Free Entry To 9 Countries

இந்த முன்னெடுப்பின் மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கி கிடந்த சுற்றுலா துறை புத்துயிர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.