பிரிந்து சென்ற மனைவி - பார்ப்பதற்காக 100 நாட்களுக்கு மேல் சைக்கிளில் பயணம் செய்த நபர்!
மனைவியை பார்க்க நபர் ஒருவர் 100 நாட்களுக்கு மேல் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
சைக்கில் பயணம்
சீனா, லியான்யுங்காங்கைச் சேர்ந்த நபர் ஷோ(40). இவர் ஷாங்காயில் தனது மனைவி லீயை சந்தித்துள்ளார். தொடர்ந்து 2007ல் இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஆனால் 2013ல் விவாகரத்து பெற்றுள்ளனர்.
இருப்பினும், அவர்களது உறவில் நெருக்கம் உருவாகி, மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இதற்கிடையில் லீ,
“அவர் மீண்டும் என்னோடு சேர விரும்பினார். நான் லாசாவுக்கு வருகிறேன் என்று அவரிடம் நகைச்சுவையாக சொன்னேன். அவர் அங்குவரை சைக்கிள் ஓட்டிக்கொண்டு வர முடிந்தால், நாம் சமரசம் செய்ய பரிசீலிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். இதை தீவிரமாக எடுத்துக்கொண்ட ஷோ, 4,400 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து மனைவியை பார்த்துள்ளார்.
பின்னணி என்ன?
இடையில், வெப்பச்சலனம் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்துகடுமையான வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக சாலையில் மயங்கி விழுந்துள்ளார். ஷோவின் நேர்மையான அன்பால் மறுபடியும் கவரப்பட்ட லீ,
அவருடன் இணைய முடிவு செய்து இணைந்து லாசாவை நோக்கி பயணம் செய்துள்ளனர். அதில், லாசாவிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியிஞ்சியில் மலையேற்றத்தின்போது உடல்நலக்குறைவை லீ எதிர்கொண்டுள்ளார்.
ஆனால் தம்பதியினர் இருவரும் விடாமுயற்சியுடன் இலக்கை அடைந்துள்ளனர். இதனையடுத்து தற்போதுநேபாளம் மற்றும் ஐரோப்பாவிற்கு தனது அடுத்த சைக்கிள் பயண சாகசத்தைத் திட்டமிட்டுள்ளார்.