வரலாறு காணாத காட்டுத்தீ; 51 பேர் உடல் கருகி பலி - அவசரநிலை பிரகடனம்
காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
காட்டுத் தீ
சிலியின் மத்திய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென அதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அங்கு உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மேல் தீ பற்றி எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விமானங்களின் உதவியுடன் நீர் கொண்டு வரப்பட்டு, வனத்தின் மேல் பகுதியில் இருந்து நீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீயில் கருகி 51 பேர் உயிரிழந்தனர்.
51 பேர் பலி
பலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் தெரிவித்துள்ளார். காட்டுத் தீயில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காட்டுத் தீ பரவல் குறைவு என்றாலும் உயிரிழப்பு அதிகம் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்துள்ளார். அங்கு, அவசர நிலை பிரகடனப்படுத்தி உள்ளது.
முதற்கட்ட விசாரணையில் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றின் வேகம் காரணமாக மரக்கிளைகளுக்கு இடையிலான உராய்வுகளே இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.