தீயை அணைக்க போராடிய விமானிகள் - வெடித்து சிதறிய விமானம்!
தீயை அணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த விமானம் வெடித்து சிதறியது.
காட்டுத் தீ
ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் வெப்ப அலை கடுமையாக வீசி வருகிறது. இதனால், கிரீஸ், இத்தாலியில் காட்டுத் தீ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சோர்பு மற்றும் எவியா தீவிலும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
அப்போது, சி.எல்-415 என்ற தீயணைக்கும் விமானம் ஒன்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இதில் 2 விமானிகள் இருந்தனர். காட்டுத்தீ மீது தண்ணீரை ஊற்றி விட்டு அந்த விமானம் திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்து தரையில் மோதி வெடித்து சிதறியது.
2 விமானிகள் பலி
இந்த விபத்தில் 2 விமானிகளும் உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தொடர்ந்து, விமானிகள் 2 பேர் பலியானதையடுத்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.