பற்றி எரியும் காட்டுத் தீ; 19 ஆயிரம் பேர் வெளியேற்றம் - அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்!
கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ பரவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
காட்டுத் தீ
கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவுக்கு கோடைக்காலத்தில் வெயிலைத் தணிக்க சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக கிரேக்க நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இந்த ரோட்ஸ் தீவிற்கு வருபவர்களில் பிரிட்டனைச் சேர்ந்தவர்களே அதிகம். இந்நிலையில் அங்கு காட்டுத் தீ பரவியுள்ளது.
கடந்த புதன் கிழமை முதல் கிரேக்கத்தில் காட்டுத் தீயின் தாக்கம் தொடர்கிறது. கடந்த 6 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 45 டிகிரி செல்ஸியஸ் நோக்கி வெப்பநிலை அதிகரித்துள்ளது. காட்டுத்தீயினால் ஏற்பட்ட புகையாலும்,வெப்பத்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கடற்கைரை மற்றும் பொழுது போக்கு பூங்காக்களை நோக்கி மக்கள் சென்றனர்.
காட்டுத் தீயில் சிக்கி விலங்குகளும் ஆங்காங்கே இருந்துள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 19 ஆயிரம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் போக்குவரத்துக்காக நிற்கும் நிலை ஏற்பட்டதால் அங்கு பெரும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு
ரோட்ஸ் தீவில் மட்டுமல்லாமல் ஏதன்ஸ் நகரின் கிழக்கில் உள்ள ஈவியா தீவு, கோர்ஃபு தீவு, ஐஜியோ ஆகிய தீவுகளிலும் அவசர சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுசிறு குடியிருப்புகளில் உள்ள மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை கடலோர கப்பல் படை 3000 சுற்றுலாப் பயணிகளை படகுகள் மூலம் கடற்கரை பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் உட்பட 19 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். உள்ளூரில் உள்ள மக்கள் தங்கள் கார்கள் மற்றும் டிரக்குகள் போன்ற வாகனங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்று பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.