பள்ளி மாணவர்களுக்கு பேப்பரில் மதிய உணவு - கொடூர செயல்!

Viral Video Madhya Pradesh
By Sumathi Nov 08, 2025 02:14 PM GMT
Report

அரசு பள்ளியில் பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேப்பரில் உணவு 

மத்திய பிரதேசம், ஹுல்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களை வளாகத்தில் அமர வைத்து தட்டிற்கு பதிலாக, பேப்பர்களில் மதிய உணவு பரிமாறப்பட்டது.

madhya pradesh

மதிய உணவுத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன் - 5 பெண்களிடம் கெஞ்சிய டாக்டர்!

உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன் - 5 பெண்களிடம் கெஞ்சிய டாக்டர்!

அதிர்ச்சி வீடியோ

இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஷியோபூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி, சத்துணவு பொறுப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.