முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதிக்கனும் - உயர்நீதிமன்றம்
முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2வது திருமணம்
கேரளாவைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப். இவரும், இவரது இரண்டாவது மனைவியும் திருமணத்தை அங்கீகரிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாம் திருமணத்தை பதிவு செய்ய விரும்பினால், முதல் மனைவிக்கு கருத்துத் தெரிவிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
நீதிமன்ற கருத்து
முதல் மனைவி ஆட்சேபணை தெரிவித்து, இரண்டாம் திருமணம் செல்லாது என்று குற்றம் சாட்டினால், திருமண பதிவாளர் பதிவை தவிர்த்துவிட்டு,

அதன் செல்லுபடியை நிலைநாட்ட வழக்கை சிவில் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் முதல் மனைவி சேர்க்கப்படாததால், நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.