பள்ளி சிறுமிகளுக்கு பிரசவம்; குழந்தைகள் திருமணம் - திணறும் தமிழக மாவட்டம்!
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது.
குழந்தை திருமணம்
காஞ்சிபுரம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கு 4 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதேபோல், 8ஆம் வகுப்பு பயின்ற மாணவிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறுமிகள் பிரசவம்
இருப்பினும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரசவிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் அச்சமடைகின்றனர். 2012 முதல் இதுவரை 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், குழந்தை திருமணம் குறித்து வரும் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளோம். உடனடியாக அந்த திருமணத்தை நிறுத்த, அனைத்து அதிகாரிகளையும் அழைத்து நடவடிக்கை எடுப்போம். இந்த அக்டோபர் மாதம் மட்டும், 4 குழந்தை திருமணங்களை நிறுத்தியுள்ளோம்.
குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில், சைல்டு லைன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழுமம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.