குழந்தை திருமணம்...14 வயதில் தாயான சிறுமி - குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

Madurai POCSO Child Abuse Marriage
By Sumathi Aug 22, 2022 06:20 AM GMT
Report

14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 குழந்தை திருமணம் 

மதுரை, உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியை சேர்ந்த பெரியகருப்பன். இவர் மகன் உதயகுமாருக்கு தேனியை சேர்ந்த தம்பதியின் 14 வயது மகளை கடந்த ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குழந்தை திருமணம்...14 வயதில் தாயான சிறுமி - குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! | Child Marriage Case In Usilampatti

சட்ட விரோதமான இந்த குழந்தை திருமணம் வெளியே தெரியாமல் இருக்க போலக்காபட்டியிலுள்ள தோட்டத்து வீட்டிலயே இருவரையும் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

7 மாத கர்ப்பம்

தனக்கு என்ன நடக்கிறது, உடலிலும் மனதலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியாத அக்குழந்தை 7 மாத கர்ப்பமான நிலையில் நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் உதயகுமாரின் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.

குழந்தை திருமணம்...14 வயதில் தாயான சிறுமி - குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! | Child Marriage Case In Usilampatti

ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அறிந்து விரைந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார், குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை இறப்பு 

14 வயது குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாகவும், அக்குழந்தையை கர்ப்பமாக்கியது தொடர்பாகவும் உதயகுமார் மீது போக்சோ உட்பட பல பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பத்தினரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

இக்கொடுமை சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.