3 வருஷத்தில் 1448 சிறுமிகளுக்கு பிரசவம்; இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும்.. ஷாக் ரிப்போர்ட்
மைனர் பெண்கள் பிரசவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமிகள் பிரசவம்
திருநெல்வேலியில் 18 வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாகப் பெண்கள் இளம் வயதில் குழந்தை பெற்றெடுப்பதால், பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்த விவரங்களை அறிய மதுரையைச் சேர்ந்த வெர்ணிகா மேரி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டுள்ளார். அதில், கடந்த 2021,2022,2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் நெல்லையில் சுமார் 1488 இளம் பெண்களுக்குப் பிரசவம் நடந்துள்ளது.
அதிர்ச்சி தகவல்
அதில் 1101 பிரசவங்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும்,347 பிரசவங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது. மேலும் மேலப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சுமார் 88 குழந்தைகள், மானூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 44 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் 2000-க்கும் மைனர் பெண்களுக்கு பிரசவம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.