வடமாநில சிறுமி கடத்தல் ; கோவையில் போலீசார் தேடுதல் வேட்டை

Coimbatore Tamil Nadu Police
By Thahir Aug 25, 2022 06:07 AM GMT
Report

வடமாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடத்தப்பட்டதாக அவரது தந்தை ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் கோவையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமி கடத்தல்

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று கடத்தப்பட்டதாக அவரது தந்தை ட்விட்டரில் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்திருந்தார்.

வடமாநில சிறுமி கடத்தல் ; கோவையில் போலீசார் தேடுதல் வேட்டை | Child Girl Kidnapping Police Search In Coimbatore

சிறுமியின் தந்தை பதிவிட்டுள்ள அந்த பதிவில், எனது மகள் நேற்று கடத்தப்பட்டாள், என் மகளை கடத்தியவர்களின் கடைசி தொலைபேசி அழைப்பு கோயம்புத்துாரில் இருந்து வந்ததாகவும், மகளை விரைவில் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்திருந்தார்.

போலீசார் தேடுதல் வேட்டை 

இந்த நிலையில் தமிழக காவல்துறை கோவை மாநகர காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில்,

Tamil Nadu Police

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் உள்ள பேருந்து நிலையத்தில் 3 குழவும், ரயில் நிலையத்தில் ஒரு தனிப்படையும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவையில் மாநகர பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.