அரிவாள் வாங்க ஆதார் கார்டு கட்டாயம் - காவல் துறை கிடுக்குப்பிடி
தமிழகத்தில் சமீபகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சமீபத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்விரோத கொலை சம்பவங்களை தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட "ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம்" என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 1110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை தயார் செய்யும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரையும் காவல் நிலைய உட்கோட்ட அளவில் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது.
இவ்வாறு மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப் பட்டது 2548 அவர்கள் கலந்துகொண்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும்,
இது போன்ற ஆயுதங்களை தவறானவர்கள் கைகளுக்கு செல்வதை கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு காவல் ஆணையர் களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்க அறிவித்துள்ளார்