கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2069 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
முதலமைச்சர் ஆலோசனை
இதையடுத்து தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று மேலும் அதிகரித்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவீரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இன்று முதல் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர்
தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் உயிர்காக்கும் மருத்துவர்களை போற்றிடுவோம் - மருத்துவர்கள் தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து