முதலமைச்சரே உங்கள் ரோல் மாடல் - மாணவர்களுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அட்வைஸ்!
தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தலைமைப்பண்புக்கே எடுத்துக்காட்டாய் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உங்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மு.க.ஸ்டாலின்
கோவில் என்பது அன்னசத்திரத்திற்கு மட்டுமல்ல அறிவு ஆலயத்திற்கும் தான் என மாற்றிக்காட்டியவர் அறிவலாயத்திலிருந்து புறப்பட்ட நம் முதலமைச்சர் அதனால் தான் அவர் மனிதநேயமிக்க மக்கள் முதல்வராக திகழ்கிறார் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை, கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 748 மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
ரங்கசாமி ஒரு டம்மி....பம்மாத்து ஆட்சி செய்யும் பாஜக - புதுச்சேரியில் முதல்வர் முக ஸ்டாலின் கடும் விமர்சனம்
ரோல் மாடல்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று திட்டங்களை தீட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்தவகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்பது கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மனிதநேய மிக்க திட்டங்களை செயல்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனிதநேய தலைவராக திகழ்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள மாணவக் கண்மணிகளே... உழைப்புக்கு வடிவமாய், தலைமைப்பண்புக்கே எடுத்துக்காட்டாய் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உங்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.