கொடைக்கானலில் முதலமைச்சர் - லண்டன் சென்ற அமைச்சர் உதயநிதி !!
தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தலைவர்கள் ஓய்வில் உள்ளார்கள்.
மக்களவை தேர்தல்
தமிழகத்தில் வெயிலை பொருட்படுத்தாமல், கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். தேர்தல் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நாட்டின் பல இடங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்ட தலைவர்கள் தற்போது ஓய்வில் உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக தற்போது கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கு அவர் கோல்ப் விளையாட்டு விளையாடும் காட்சி, இன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.
அவரை போலவே, தற்போது மாநிலத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார். தேர்தல் முடிவடைந்த நிலையில், வரும் ஜூன் 4-ஆம் தேதி வரை மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்றுள்ளார். அவரின் பயணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
வரும் 10 -ஆம் தேதி போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.