இறுதிநாளிலும் தீர்ப்பு; மன்னித்து விடுங்கள் - பிரியாவிடை பெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்!
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெற்றார்.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
2022ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இதனால், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய டி.ஒய்.சந்திரசூட், இது நீதியின் பயணம். உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு சட்டம் மற்றும் வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக் கொடுத்தீர்கள்.
ஓய்வு
இன்று நான் நடத்திய 45 வழக்குகளில் வாழ்க்கையைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். உங்களில் யாரையாவது நான் எப்போதாவது காயப்படுத்தியிருந்தால், நான் உங்களைத் துன்புறுத்த விரும்பாத என்னை மன்னித்து விடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கடைசிப் பணி நாளிலும் சிறப்பானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளார். தனது 8 ஆண்டுக்கால உச்ச நீதிமன்ற பதவி காலத்தில் சுமார் 600 தீர்ப்புகளை தனியாக எழுதியுள்ளார்.
இதை தவிர ஆயிரத்து 200க்கும் அதிகமான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் அங்கம் வகித்துள்ளார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.