உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவியேற்பு
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவியேற்றார்.
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் டெல்லியில் பதவியேற்றுக்கொண்டார். டிஒய் சந்திரசூட்டுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவியில் இருப்பார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதி பதவியேற்றார்.
இதனிடையே, ஆதார் கார்டு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பங்காற்றியுள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அதுதொடர்பான வழக்குகளில் தீர்ப்பும் வழங்கியிருக்கிறார்.
இதுபோன்று, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது.