CBI, ED போன்ற விசாரணை அமைப்புகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி அறிவுரை!

India Central Bureau of Investigation Enforcement Directorate
By Jiyath Apr 02, 2024 07:25 AM GMT
Report

சி.பி.ஐ விசாரணை அமைப்பின் 20-ம் ஆண்டு துவக்கவிழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றுள்ளார்.

துவக்கவிழா 

சி.பி.ஐ அமைப்பின் முதல் தலைவரான டிபி கோலிவை நினைவு கூறும்வகையில், சி.பி.ஐ விசாரணை அமைப்பின் 20-ம் ஆண்டு துவக்கவிழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

CBI, ED போன்ற விசாரணை அமைப்புகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி அறிவுரை! | Chief Justice Dy Chandrachud Speech Cbi Function

அப்போது பேசிய நீதிபதி சந்திரசூட், "ஊழலுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் விசாரணை அமைப்பாக உள்ள சி.பி.ஐ. தங்கள் விசாரணை வளையத்தை பல்வேறு வகையிலான குற்ற வழக்குகளை விசாரிப்பதிலும் அதிகரிக்க வேண்டும். இது சி.பி.ஐ.க்கு அதன் குறிக்கோளுடன் சேர்த்து கூடுதல் பொறுப்பை அளிக்கும்.

திகார் சிறையில் டெல்லி முதல்வர் - ஜெயிலில் சிறப்பு சலுகைகள் என்னென்ன?

திகார் சிறையில் டெல்லி முதல்வர் - ஜெயிலில் சிறப்பு சலுகைகள் என்னென்ன?

நீதிபதி அறிவுரை 

நாம் நமது விசாரணை அமைப்புகளை (சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, புலனாய்வுத்துறை) மிகவும் மெல்லிதாக பரப்பிவிட்டோம் என்று நினைக்கிறேன். நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான குற்றங்கள், நாட்டிற்கு எதிரான பொருளாதார குற்றங்கள் மீது மட்டும் விசாரணை அமைப்புகள் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

CBI, ED போன்ற விசாரணை அமைப்புகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி அறிவுரை! | Chief Justice Dy Chandrachud Speech Cbi Function

வழக்குப்பதிவு செய்வது முதல் விசாரணை நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும். அதிகப்படியான வழக்குகள் இருப்பதால் டிஜிட்டல்மயமாக்குதல் நேரவிரயத்தை மிச்சமாக்கும்.

விசாரணை அமைப்புகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும். குற்றவியல் நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்" என்று தெரிவித்துள்ளார்.