பெண் எஸ்.பி-க்கு ஆபாச படம் அனுப்பி, பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி - குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
ஐ.பி.எஸ் அதிகாரி தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
தமிழக காவல் துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன், இவருக்கு 59 வயது. இவர் தனக்கு கீழ் வேலை பார்க்கும் ஐபிஎஸ் அதிகாரியான பெண் எஸ்.பி தான் லஞ்ச ஒழிப்பு துறையில் அவருக்கு கீழ் பணிபுரியும்போது அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
அந்த புகாரில், "செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பினார் என்றும், அறைக்கு தனியாக அழைத்து அத்துமீறியதாகவும், சம்மதம் இல்லாமல் செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும், பாலியல் ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்தினார்" என்றும் கூறினார்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்நிலையில், பெண் அதிகாரிக்கு 2017-ல் இருந்து அவர் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018-ல் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இதனை சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவானது.
இந்த வழக்கில் ஐ.ஜி முருகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நிலுவையில் உள்ள வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.