த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு - சேலம் ராஜூவை விளாசிய இயக்குநர் சேரன்!
த்ரிஷாவை அவதூறாக பேசிய சேலம் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க சேரன் கோரியுள்ளார்.
சேலம் ராஜூ
சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.கே.ராஜு. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு மது மற்றும் பெண்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்து கொடுத்தனர். நடிகரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தான், நடிகைகளை அழைத்து வந்தார்.
சேரன் கண்டனம்
குறிப்பாக, நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அவதூறான கருத்துக்களையும் தெரிவித்தார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள இயக்குநர் சேரன், ‘அதிமுக பிரமுகரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.
எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு உரிய பதில் கொடுப்பதுடன் தகுந்த நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர் சங்க தலைவர் விஷால், நடிகர் கார்த்தி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.