சங்கீதா, அம்மாலாம் இல்ல.. அவர்தான் - த்ரிஷா முன் மனம் திறந்த விஜய்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜய் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 GOAT திரைபடத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து தளபதி 69 படத்தில் கமிட்டாகியுள்ளார். அதுதொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், அரசியலில் தீவிரமாக களமிறங்கி தனது கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் என்பதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
பேட்டி வைரல்
இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் திரிஷா இணைந்து கொடுத்த பேட்டியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தொகுப்பாளியான அனு, விஜய்யிடம், உங்களுக்கு பிரியாணி பிடிக்குமே மட்டனா, சிக்கனா என்று கேட்க மட்டன் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, உங்க மனைவி சங்கீதா பண்ற பிரியாணி நல்ல இருக்குமா, அம்மா பண்ற பிரியாணி நல்ல இருக்குமா என்று கேட்க, விஜய் உடனே, என் குக் பழனி பண்ற பிரியாணி. அவர் சூப்பராக பண்ணுவார், அவர் பிரியாணிக்காக நாள் முழுவதும் பட்டினியாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.