நல்லவேளை தப்பிச்சுட்டேன்; விஜய் என் நண்பர் மட்டும் இல்ல..அவ்வளவு இருக்கு - உருகிய த்ரிஷா!
லியோ வெற்றி விழாவில் நடிகை த்ரிஷாவின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.
வெற்றி விழா
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வசூலில் உலகம் முழுவதும் பெரும் சாதனையை படைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில், திரைப்பட நடிகர்கள் பலர் கலந்துக்கொண்டனர். அந்த வகையில், பட நாயகியான நடிகை த்ரிஷா பேசுகையில்,
த்ரிஷா பேச்சு
"எனது பால்ய நண்பருடன் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படத்தில் ஒன்றாக நடிப்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்தேன். எனது வாழ்நாட்களில் மறக்க முடியாத இனிமையான தருணங்கள் அவை. விஜய் எனது நண்பர் மட்டுமல்ல, நான் விரும்பும் நபரும் கூட. அவரின் மீது அவ்வுளவு அன்பு உள்ளது.

அமைதி மற்றும் அமைதியுடன் கூடிய வெற்றி தான் சரியான பதிலடியாக இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது படங்களில் கதாநாயகிகள் கொல்லப்பட்டு விடுவார்கள்.
ஆனால் நான் நல்லவேளையாக தப்பித்திருக்கிறேன். என்னை இந்த படத்தில் கொல்லாமல் இருந்ததற்கு, அவருக்கு மிகுந்த நன்றியை நான் தெரிவிக்கிறேன்" எனக் கூறியுள்ளார். இந்த பேச்சு அனைவரையும் ஈர்த்தது.
You May Like This Video
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil