இனி வெறும் 4 மணி நேரம்தான்.. சென்னையிலிருந்து திருச்சிக்கு.. தயாரான திட்ட அறிக்கை!
சென்னை- திருச்சி எக்ஸ்பிரஸ்வே அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை- திருச்சி
தமிழகத்தின் பிரதான தேசிய நெடுஞ்சாலை ஆக இருக்கக்கூடிய சென்னை - திருச்சி சாலை ஆனது நான்கு வழிச்சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் காணப்படுவது வழக்கமாகி வருகிறது.
மேலும், தொடர்ந்து விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளும் நடந்து வருவதால் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் இதனை எட்டு வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
8 வழிச்சாலை
இதன் மூலம் சென்னையில் இருந்து திருச்சி இடையே சுமார் 310 கிலோமீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்டால் 6 மணி நேர பயணத்தை வெறும் 4 மணி நேரம் பயணத்திலேயே சென்னையில் இருந்து திருச்சி சென்றடையலாம்.
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள சாலை விரிவாக்க பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு இந்த 8 வழிச்சாலை திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சார்பில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்தப் பணிகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.