எப்புட்றா.. சென்னை - பெங்களூரு; இனி 2 மணி நேரம் தான் - எப்படி தெரியுமா?

Chennai Bengaluru
By Sumathi Sep 09, 2023 05:10 AM GMT
Report

சென்னை - பெங்களூரு அதிவிரைவுச்சாலை செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

chennai - bangalore

சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். வார இறுதி நாட்களில் ஏராளம்.

எப்புட்றா.. சென்னை - பெங்களூரு; இனி 2 மணி நேரம் தான் - எப்படி தெரியுமா? | Chennai Bengaluru Express Way Only 2 Hours

தற்போது, சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல குறைந்தபட்சம் 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. இந்நிலையில், அதிவிரைவுச் சாலை அமைக்கப்படுகிறது. இது 258 கி.மீ நீளம் உள்ளது.

2 மணி நேரம் தான்..

பெங்களூர் புறநகரான ஹோஸ்கோட்டில் தொடங்கி மாலூர், பங்கார்பேட்டை, கோலார் (கர்நாடகா), வெங்கடகிரிகோட்டை, பாலமனார், பங்காருபாலம், சித்தூர், (ஆந்திரா) அரக்கோணம், ராணிப்பேட்டை வழியாக சென்னையின் புறநகரான ஸ்ரீபெரும்புதூர் வரையில் அமைகிறது. இந்தச் சாலை பெங்களூர் ரிங் ரோட்டுடன் இணைக்கப்படும்.

எப்புட்றா.. சென்னை - பெங்களூரு; இனி 2 மணி நேரம் தான் - எப்படி தெரியுமா? | Chennai Bengaluru Express Way Only 2 Hours

அதேபோல, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து உயர்மட்ட சாலையாக மதுரவாயலில் இணையும். இந்த அதிவிரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பணிகள் முடிந்து இந்த விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால், இனி சென்னை - பெங்களூர் செல்ல வெறும் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே ஆகும். இந்த அதிவிரைவுச்சாலை ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.