வெறும் 1 மணி நேரம்தான்..சென்னை டூ பெங்களூர் - வெளியான முக்கிய தகவல்!
புதிய அதிவேக ரயில் திட்டம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிவேக ரயில்
சென்னை டூ பெங்களூர் ரூட்டில் புல்லட் ரயில் திட்டத்தை ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
463 கிலோமீட்டர் நீளத்திற்கு அமையும் இந்த ரயில் திட்டம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. பெங்களூரில் 3 நிறுத்தங்கள் உட்பட மொத்தம் 11 இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை டூ பெங்களூர்
இந்த ரயில் மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. சராசரி வேகம் மணிக்கு 250 கிமீ ஆக இருக்கும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னையில் இருந்து வெறும் 90 நிமிடத்தில் மைசூருக்கு சென்றடைய முடியும். இந்த புல்லட் ரயில் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் சென்னை டூ பெங்களூர் வரை 306 கிமீ தொலைவுக்கு ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் சென்னை டூ பெங்களூர் வெறும் 1 மணி நேரத்தில் செல்ல முடியும். அதன் பிறகு இரண்டாவது கட்டத்திலேயே இது பெங்களூர் டூ மைசூர் வரை 157 கிமீ தொலைவுக்கு நீட்டிக்கப்படும்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை- அகமதாபாத் ரயில் பணிகள் இப்போது படுவேகமாக நடந்து வரும் நிலையில், அது முடிந்த பிறகு இந்த சென்னை- பெங்களூர்- மைசூர் ரயிலுக்கான பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.