வந்தாச்சு பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே - மத்திய அரசு முக்கிய தகவல்!

Chennai Bengaluru
By Sumathi Jul 25, 2024 11:30 AM GMT
Report

சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு - சென்னை

பெங்களூரு - சென்னை இடையிலான 258 கிலோமீட்டர் தூரம் கொண்ட அக்செஸ் கன்ட்ரோல் உடன் 4 வழித்தடங்கள் கொண்ட எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.

bengaluru - chennai

அது சற்று இழுப்பறியாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்த திட்டம் சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி பெங்களூருவை ஒட்டியுள்ள ஓஸ்கோடே வரை செல்கிறது. இதற்கான மொத்த செலவு 17,930 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்பார்வை செய்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி சி.என்.அண்ணாதுரை மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

எப்புட்றா.. சென்னை - பெங்களூரு; இனி 2 மணி நேரம் தான் - எப்படி தெரியுமா?

எப்புட்றா.. சென்னை - பெங்களூரு; இனி 2 மணி நேரம் தான் - எப்படி தெரியுமா?

அமைச்சர் பதில்

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அதன்படி, பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டத்தின் பேக்கேஜ் 1 (24 கி.மீ) பணிகள் வரும் டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைகிறது.

நிதின் கட்கரி

இதற்காக செலவு 1,028.47 கோடி ரூபாய். பேக்கேஜ் 2 (24.5 கி.மீ) பணிகள் வரும் நவம்பர் 20ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதன் செலவு 1,051.36 கோடி ரூபாய். பேக்கேஜ் 3 (25.5 கி.மீ) பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முடிவடைகிறது.

இதற்கான செலவு 1,155.49 கோடி ரூபாய். பேக்கேஜ் 4 (31.70 கி.மீ) பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி நிறைவு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.