வெறும் 5 மணி நேரம் தான்.. ஈவ்னிங் சென்னைல ஏறுனா டின்னருக்கு பெங்களூர் போயிரலாம்!
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வந்தே பாரத் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை-பெங்களூர்
சென்னையில் இருந்து செல்லும் மக்கள் பெரும்பாலும் பெங்களூரு நகருக்கு அதிக அளவில் பயணிக்கின்றனர். இந்த ரயில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மைசூரு சென்றடைகிறது.
இந்நிலையில், இதே வழித்தடத்தில் 20663 / 20664 என்ற எண் கொண்ட மைசூரு - பெங்களூரு - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.
வந்தே பாரத்
இது புதன் கிழமை தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு மைசூரு செல்கிறது. சென்னை - பெங்களூரு இடையிலான பயணத்திற்கு 4.25 மணி நேரம் ஆகிறது.
ஆனால், ஐஆர்சிடிசி இணையதளத்தில் சென்று பார்த்தால் அடுத்த 10 நாட்களுக்கு டிக்கெட்கள் ஹவுஸ்புல்லாக இருக்கின்றன. ஏசி சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1,165.
மே ஒன்றாம் தேதியில் இருந்து தான் டிக்கெட்கள் இருப்பதை பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.