மதுரை டூ பெங்களூர்; இனி 6 மணி நேரம்தான்.. வந்தே பாரத் ரயில் எங்கெல்லாம் நிற்கும் - முழு விவரம்
மதுரை - பெங்களூர் ரூட் மேப் வெளியாகியுள்ளது.
மதுரை - பெங்களூர்
மதுரை - பெங்களூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதனை அடுத்த வாரம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தருமபுரி, ஓசூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். கூடுதல் நிலையங்களும் இணைக்கப்படவுள்ளது. மேலும், ரயில் புதிய ஆரஞ்சு நிறத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வந்தே பாரத்
இந்த வந்தே பாரத் ரயில் ஆறு மணி நேரத்தில் 435 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க உள்ளது. பயண கட்டணம் அதிகமாக உள்ள போதிலும் அவசரப் பணிகளை மேற்கொள்வதற்கு மிகவும் உதவியாக இருப்பதால் வந்தே பாரத் ரயில் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.