எச்சரித்த காவல்துறை..கேட்காத ரவுடி - என்கவுன்ட்டர் நடந்தது எப்படி?
சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பிரபல ரவுடி
கடந்த 2020-ம் ஆண்டு சென்னை - அண்ணா சாலையில் காக்கா தோப்பு பாலாஜியும் அவரது நெருங்கிய நண்பருமான தென் சென்னை தாதா சிடி மணியும் காரில் சென்று கொண்டிருந்தபோது, ரவுடி சம்போ செந்தில் தரப்பினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
இந்த சம்பவத்தில் இருவரும் நூலிழையில் உயிர் தரப்பினர்.இந்த குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் காக்கா தோப்பு பாலாஜியைக் கைது செய்தனர். இதனையடுத்து சிறையிலிருந்து வெளிவந்த பாலாஜி ஆந்திர எல்லைப் பகுதியில் வழக்கம்போல தனது ஆட்கள் மூலம் ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கொடுங்கையூர் முல்லை நகர்ப் பகுதியில் காவல்துறை இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த ஒரு காரை மடக்கிச் சோதனையிட முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது.
என்கவுன்ட்டர்
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த காரை விரட்டிச் சென்று வியாசர்பாடி அருகே மடக்கிப் பிடித்த போது காரின் உள்ளே இருந்தது காக்கா தோப்பு பாலாஜி எனத் தெரியவந்தது. அப்போது அவரை காவல்துறை பிடிக்க முயன்றபோது, இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதையடுத்து கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டார். இதில் மார்பில் குண்டு பாய்ந்து காக்கா தோப்பு பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.