மர்ம நபர்களால் பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை - உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு
பிரபல ரவுடி ஆதிக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரவுடி சுட்டுக் கொலை
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மீது ஏறத்தாழ 100 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருநதார்.
இதற்கிடையில் நேற்று அவரும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் போலீசார் பிரயாக்ராஜில் உள்ள மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது சில மர்ம நபர்கள் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அண்மையில் ஆதிக் அகமது மகனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற நிலையில் தற்போது இவரையும் மர்ம நபர்கள் சுட்டுக் கொண்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள்
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆதிக் அகமது அகமதாபாத்தில் உள்ள சிறையில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வந்தனர்.
ஆதிக் அகமது சமாஜ்வாடி கட்சியில் இருந்து எம்பியாக தேர்வு இருந்துள்ளார். கடத்தல் வழக்கில் தண்டனை பெற்றவர்.
2005இல் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜு பால் கொலை மற்றும் கடந்த பிப். மாதம் ராஜு பாலின் வழக்கறிஞர் உமேஷ் பால் கொல்லப்பட்ட வழக்குகளிலும் அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆதிக் அகமதின் மகன்களில் ஒருவரான ஆசாத், வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
அவரையும் அவரது குலாம் ஆகியோரை ஜான்சியில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் என்கவுன்டர் செய்தனர்.
அவரது மற்ற 4 மகன்களில் இருவர் சிறையிலும் இருவர் சிறார் இல்லத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.