தமிழகத்தில் மாட்டுக்கறிக்கு தடையா? பகீர் கிளப்பிய காவல்துறை!

Tamil nadu DMK BJP Tamil Nadu Police
By Sumathi Jul 07, 2022 03:52 AM GMT
Report

ட்விட்டரில் தான் மாட்டுக்கறி சாப்பிடுவதை போட்டோ எடுத்து போட்ட நபருக்கு சென்னை காவல்துறை 'இது தேவையற்ற பதிவு' என்று பதில் அளித்துள்ளது.

மாட்டுக்கறி

இந்தியாவில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டுக் கறிக்கு தடை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டால் கொலை குற்றம் செய்த அளவிற்கு பெரிய அளவில் தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது.

beef

இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பது உலகறிந்த ஒன்று. ஆனால் தற்போது நடக்கும் அரசியல் சூழ்நிலைகள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக இல்லை என்று உறுதிப்படுத்துகிறது.

தமிழகத்திலும் தடை?

சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை மிகப்பெரிய அளவில் நடந்ததை அடுத்து தற்போது பீப் என்னும் மாட்டுக்கறி பிரச்சனை ஏற்படுமோ என்ற நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உத்திரபிரதேசம் மற்றும் மற்ற ஒரு சில வட மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டது போல் தமிழகத்திலும் தடை விதிக்கப்படுமா என்ற எண்ணம் சென்னை போலீசாரின் செயலால் தற்போது எழுந்துள்ளது.

 ட்விட்டர் பதிவு

நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் தான் சாப்பிட்ட மாட்டுக்கறியை புகைப்படம் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

யாரையும் டேக் கூட செய்யாமல் வெறும் புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்து உள்ளார். இந்த பதிவிற்கு தானாக முன்வந்து சென்னை காவல்துறை "இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது, தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்" என்று பதில் அளித்துள்ளது.

திமுக

போலீசாரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. உணவு, உடை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம், இதில் காவல்துறை எவ்வாறு தலையிடலாம் என்று கடும் கண்டன குரல்கள் எழுந்துள்ளது.

இதற்கு சென்னை மாநில காவல்துறை விளக்கம் கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. தற்போது தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

கண்டனங்கள்

சமூக நீதி பேசும் கட்சி என்று தன்னை முன்னிறுத்தி கொள்ளும் திமுகவின் ஆட்சியிலேயே மாட்டுக்கறிக்கு தடையா என்று சந்தேகம் எழும்புகிறது. திமுக ஆட்சி பொறுப்பில் ஏற்றதில் இருந்து பல லாக் அப் மரணங்கள் ஏற்பட்டு வருகிறது.

ஏற்கனவே போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருந்து வரும் நிலையில் சென்னை காவல் துறையின் இந்த பதிவு கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.  

தமிழகத்தில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு..!