தமிழகத்தில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு..!

COVID-19
By Thahir Jul 07, 2022 12:01 AM GMT
Report

தமிழகத்தில் இரண்டு நாட்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று நேற்று மேலும் சற்று உயர்ந்துள்ளது.

மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2743 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 2743 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது நேற்று மட்டும் 2662 பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது . கொரோனாவால் தமிழகத்தில் வீடு மற்றும் மருத்துவமனைகளில் 17,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு..! | Covid Case Increase Tamil Nadu

நேற்று மட்டும் 1791 பேர் குணமடைந்துள்ளனர்,உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 13,086 ஆக பதிவாகிய நிலையில்,நேற்று ஒரே நாளில் 16,159 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல்..!