திராவிட மாடல் ஆட்சியில் மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை : சர்ச்சையில் பிரியாணி திருவிழா

By Irumporai May 12, 2022 09:11 AM GMT
Report

வேலூரில் நடை பெற உள்ள பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணிக்கு அனுமதி கொடுக்காதது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி என்று சொன்னாலே அது வேலூர் ஆம்பூர் பிரியாணிதான், அந்த வகையில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மே 13, 14, 15 என மூன்று நாட்கள் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடக்கிறது.

ஆம்பூர் நகரில் மட்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 100 பிரியாணி ஹோட்டல்கள் உள்ளன. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, முயல் பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றன.

திராவிட மாடல் ஆட்சியில் மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை : சர்ச்சையில் பிரியாணி திருவிழா | Permission Beef Biryani Free Biryani Vellore

இங்குள்ள 100 ஹோட்டல்களில் சரிபாதி மாட்டுக்கறி பிரியாணி ஹோட்டல்கள். மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணிக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது.

ஆகவே இது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாவை சந்தித்து மாடுக்கறி பிரியாணியை விழாவில் இடம் பெற செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர் . இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் சில சமுதாய மக்கள் மாட்டுக்கறி பிரியாணியை விரும்பவில்லை.

ஆகவே அவர்களையும் நான் பார்க்க வேண்டும் அதனால் அதற்கு அனுமதியில்லை என கூறியதாக தகவல்கள் வெளியான நிலையில் ஆட்சியரின் இந்த செயலுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், அரசின் சார்பில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில், மாட்டுக்கறி பிரியாணிக்கு இடமில்லை எனக் கூறிய மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நாளை தொடங்கவிருக்கும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணியை அனுமதிக்காவிடில் இலவசமாக தருவோம் என கோரிக்கை வைத்த அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சமபவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட மாடலா காவிமாடலா : 

தமிழக அரசு பட்டண பிரவேசத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது, விக்னேஷின் லாக் அப் மரணாம் ஆர்.ஏ. புரம் மக்கள் வெளியேற்றம் என தொடர்ந்து ஆளுங்கட்சியின் கடந்த சில காலமகவே நடவடிக்கைகள் அனைத்தும் சமானைய மக்களுக்கு எதிராகவே உள்ளதாக கூறுகின்றனர் எதிர் கட்சியினர்.

அந்த வரிசையில் தற்போது புகழ் பெற்ற பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை என்ற நடவடிக்கையும் சேர்ந்துள்ளது. இது இவ்வாறே தொடருமாயின் இது திராவிட மாடலா அல்லது உ.பியில் இருப்பது போன்று காவி மாடலா என்ற முணுமுணுப்பு சத்தங்கள் எழும்பி உள்ளன.

அந்த சத்தங்களுக்கு பதில் சொல்லும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதுதான் சாமானியர்களின் கோரிக்கையாக உள்ளது.