நள்ளிரவில் கேட்ட சத்தம் - குப்பை தொட்டியில்...சென்னை மக்களை பதறவைத்த சம்பவம்!
பிறந்து ஒருமாதமே ஆன பெண் ஒன்று குழந்தைக் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னையில் உள்ள நந்தனம் சி.ஐ.டி நகர் 4 வது பிரதான சாலையில் குப்பைத் தொட்டியில் நேற்றிரவு 8 மணியளவில் குப்பைத் தொட்டி குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் சென்று பார்த்துள்ளார்.
[
அப்போது குப்பைத் தொட்டியில் ஒருமாத பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை காவல்துறையினர், குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதனையடுத்து பச்சிளம் குழந்தையைக் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
பெண் குழந்தை
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர் . அதில் , ஒரு வயதான பெண்ணும் அவருடன் இளம்பெண்ணும் வந்து குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் யார் என்பது குறித்து சைதாப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் பெண் குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.