சென்னையில் நள்ளிரவில் இடி மின்னலுடன் கன மழை..!
சென்னையில் நள்ளிரவு இடி,மின்னலுடன் கன மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சேத்துப்பட்டு, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலை, நுங்கம்பாக்கம், டிடிகே சாலை, மதுரவாயல், கோயம்பேடு, அம்பத்தூர்,
அமைந்தகரை, வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை வளசரவாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், மாம்பலம், போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil