ஆணழகன் போட்டி; உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த ஜிம் டிரெய்னர் - மயங்கி விழுந்து மரணம்!

Chennai Death
By Sumathi Oct 10, 2023 07:26 AM GMT
Report

ஜிம் பயிற்சியாளர் உடற்பயிற்சிக்கு பிறகு மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிர உடற்பயிற்சி  

சென்னை அம்பத்தூரில் உள்ள மீனம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி வைஷ்ணவி. இவர்களுக்கு 2 வயது குழந்தை உள்ளார்.

ஆணழகன் போட்டி; உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த ஜிம் டிரெய்னர் - மயங்கி விழுந்து மரணம்! | Chennai Gym Trainer Death After Heavy Workout

கொரட்டூர், வெங்கடேஷ்வரா நகரில் இயங்கி வரும் உடற் பயிற்சி மையத்தில் கடந்த சில மாதங்களாக பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். வழக்கம் போல் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு, தீவிரமான உடற் பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.

மயங்கி விழுந்து மரணம்

இதற்கிடையில், பாடி பில்டிங் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில், கடுமையான உடற் பயிற்சியை முடித்துவிட்டு, குளிக்க சென்றுள்ளார். ஆனால் அதிக நேரம் ஆனபோதும், அவர் வெளியே வரவில்லை.

ஆணழகன் போட்டி; உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த ஜிம் டிரெய்னர் - மயங்கி விழுந்து மரணம்! | Chennai Gym Trainer Death After Heavy Workout

தொடர்ந்து உறவினர்கள் சென்று பார்க்கையில், யோகேஷ் மயங்கிய நிலையில் கிழே விழுந்து கிடந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அனுமதித்துள்ளனர்.

தப்பித்தவறி கூட இந்த நேரத்தில் மட்டும் தண்ணீர் குடிக்காதீங்க! இல்லையென்றால் பிரச்சினைதான்!

தப்பித்தவறி கூட இந்த நேரத்தில் மட்டும் தண்ணீர் குடிக்காதீங்க! இல்லையென்றால் பிரச்சினைதான்!

அப்போது பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.