மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர் - சாகும் முன் கடைசி நொடி: பதைபதைக்கும் காட்சி

man heart attack gym video viral
By Anupriyamkumaresan Sep 03, 2021 10:02 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

 பெங்களூருவில் ஜிம்மில் அதிக உடற்பயிற்சி செய்த நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல்நல ஆரோக்கியத்திற்கு முக்கியமாக சொல்லப்படுவது உடற்பயிற்சி. உடல்நலம் மட்டுமின்றி மனநலம் சார்ந்த ஆரோக்கியத்துக்கும் உடற்பயிற்சி மிக முக்கியம்.

ஆனால் முறையில்லாத அதீத உடற்பயிற்சி சிலரை பாதிப்புக்கும் உள்ளாக்கும். அந்த வகையில், 33 வயதான நபர் ஒருவர், பெங்களூருவில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார். உடற்பயிற்சிக்கு பின்னர் மிகவும் சோர்வாகவும், நெஞ்சுப்பகுதியில் ஒருவித அழுத்தத்தையும் அவர் உணர்ந்துள்ளார். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர் - சாகும் முன் கடைசி நொடி: பதைபதைக்கும் காட்சி | Man Get Heart Attack In Gym During Excercise

அதில், மிகவும் சோர்வாக படிக்கட்டில் அமர்ந்துள்ள அந்த இளைஞர் நெஞ்சுப்பகுதியை அடிக்கடி அழுத்திக்கொள்கிறார். தண்ணீரைக் குடிப்பதும் இதயப்பகுதியை அழுத்திக்கொடுப்பதுமாகவே அவர் அமர்ந்துள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்து செல்லும் அவர் மீண்டும் படிக்கட்டில் வந்து அமர்கிறார். திடீரென படிக்கட்டில் இருந்து சரிந்து விழுகிறார்.

மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர் - சாகும் முன் கடைசி நொடி: பதைபதைக்கும் காட்சி | Man Get Heart Attack In Gym During Excercise

அதிகப்படியான உடற்பயிற்சியே அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சிலர் இளைஞர் அதீத உடற்பயிற்சியில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும். புதியதாக ஜிம்மில் சேர்பவர்கள் மருத்துவர்களை அணுகி இதய பரிசோதனை செய்த பிறகு உடற்பயிற்சியை தொடங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த இளைஞர் சுருண்ட விழுந்த பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.