தப்பித்தவறி கூட இந்த நேரத்தில் மட்டும் தண்ணீர் குடிக்காதீங்க! இல்லையென்றால் பிரச்சினைதான்!
தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் அத்தகைய தண்ணீரை எந்தெந்த நேரங்களில் குடிக்க கூடாது எனவும் குடித்தால் என்ன ஆகும் எனவும் என்பது குறித்தும் காண்போம்
உடற்பயிற்சிக்கு பிறகு
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்படும்.
தூக்கத்திற்கு முன்னர்
பலருக்கும் இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி இரவு தண்ணீர் குடிப்பதால் இரவு நேரத்தில் சிறுநீரகம் மெதுவாகவே வேலை செய்யும் இதனால் உங்களின் முகம் காலையில் எழுந்தவுடன் சிறிது வீங்கி இருக்க கூடும்.
உணவு சாப்பிடும் போது
பலரும் சாப்பிடும் போதும் சாப்பிட முடித்த பின்பும் தண்ணீர் குடிப்பர். இவ்வாறு குடித்தால் அவை செரிமான கோளாறை தரும்.
காரமான உணவிற்கு பின்பு
சிலர் காரமான உணவுகளை உண்ட பின்பு உடனே நீர் அருந்தும் பழக்கம் கொண்டு இருப்பர். மேலும் இந்த நிலையில் நாம் நீர் அருந்தினால் அவை குடல் பகுதிக்கு சென்று வேறு வித விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்கள்.