கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்; வலுத்த கண்டனங்கள் - 4 பேர் கைது!
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல் வீசி தாக்குதல்
சென்னை, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். அந்த சமயத்தில் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனையடுத்து, போலீஸார் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 பேர் கைது
இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாம் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 6 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.